கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, 13ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், புன்னியாகவசனம், பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம் பிம்பசுத்தி நாடி சந்தானம், தத்துவார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, காலை 10 மணியளவில் யாகசாலையில் இருந்து கலசம் எடுத்து சென்று, கோவில் கோபுரம் மற்றும் மூலவர் கெங்கையம்மன் சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement