கண்காணியுங்க பஸ்களில் பட்டாசு பார்சல்கள் அனுப்புவதை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்
சிவகாசி: சென்னை,பெங்களூரு, கோயம்புத்துார் பகுதிகளுக்கு பட்டாசு பார்சல்களை ஆம்னி பஸ்களிலும், அரசு பஸ்களில் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க போலீசார் பஸ்களில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்று பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன 4000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்படுகின்றன. தீபாவளிக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேரடியாக இங்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். வர முடியாதவர்கள் அலைபேசி மூலமாக தகவல் கொடுத்து பார்சல் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு வெளி மாவட்டங்களிலிருந்து பெறப்படும் ஆர்டர்களுக்கு பட்டாசுகள் பார்சல் சர்வீஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்பப்படும். ஆனால் தற்போது ஒரு சிலர் பட்டாசு பாசல்களை பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பஸ்களில் அனுப்பி வைக்கின்றனர். இதில் வாடகை குறைவு. பஸ்களில் பட்டாசு பார்சல் அனுப்புவது மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும். சிறிது கவனக்குறைவு என்றாலும் பட்டாசு வெடித்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை தவிர்க்க போலீசார் ஆம்னி, வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் ஆய்வு செய்து பட்டாசு பார்சல் கொண்டு செல்பவர்கள் மீதும், அனுப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு பார்சல்களை உரிய பார்சல் சர்வீஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்புவது குறித்து வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்
-
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
‘தினமலர்’ பவளவிழா கட்டுரை போட்டி புதுச்சேரி கல்லுாரி மாணவி முதலிடம்
-
குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் துவக்கம்
-
ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்
-
அரசு மருத்துவமனையில் 10 பேருக்கு காது, மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை முதுகுளத்துார் டாக்டர்கள் சாதனை