‘தினமலர்’ பவளவிழா கட்டுரை போட்டி புதுச்சேரி கல்லுாரி மாணவி முதலிடம்
சிதம்பரம்: ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில், புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவி முதலிடம் பெற்றார்.
‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடந்தது.
கல்லூரி மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கத்திலும், புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் விதமாகவும் நடத்தப்பட்ட இப்போட்டியில், தினமலர் நாளிதழில் என்னைக் கவர்ந்தவை என்ற தலைப்பில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் பங்கேற்று, கட்டுரை எழுதி அனுப்பி இருந்தனர்.
அதில், புதுச்சேரி லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி பி.டெக்., மாணவி சாருமதி முதலிடமும், திருச்சி சமயபுரம் இந்திரா கணேசன் மருந்தியல் கல்லூரி மருந்தாக்கவியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஈஸ்வர் இரண்டாம் இடமும், பண்ருட்டி புலவனூர் ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி பவித்ரா மூன்றாம் இடமும் பெற்றனர்.
இவர்களுக்கு தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு எழுதிய மேடையில் தவழ்ந்தவை மற்றும் என் பல்வண்ணக் காட்சிக்கருவி என்ற தலைப்பிலான புத்தகம், இறையன்பு சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரியில் நடந்த பரிசளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் தணிகாசலம் பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு துறைத் தலைவர் செந்தில்குமார் உடனிருந்தார்.
கட்டுரைப் போட்டிக்கான ஏற்பாடுகளை வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் செய்திருந்தார்.
மேலும்
-
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்
-
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் துவக்கம்
-
கண்காணியுங்க பஸ்களில் பட்டாசு பார்சல்கள் அனுப்புவதை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்
-
ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்
-
அரசு மருத்துவமனையில் 10 பேருக்கு காது, மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை முதுகுளத்துார் டாக்டர்கள் சாதனை