தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி

பந்தலுார்: பந்தலுாரில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பந்தலுார் வருவாய்த்துறை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து, தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். ஆர்.டி.ஓ. தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.

தாசில்தார் துரைசாமி, ‘மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்திக் கொள்வதன் அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கி,’ பேசினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து பந்தலுார் பஜார் பகுதி வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு நன்றி கூறினார்.

Advertisement