நெல்லை, செங்கோட்டைக்கு ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள்

மதுரை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு மதுரை வழியாக திருநெல்வேலி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* ஈரோடு – தாம்பரம் – திருநெல்வேலி





அக்.,16 மாலை 4:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06145), மறுநாள் மதியம் 12:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. மறுமார்க்கத்தில், அக்.,20 இரவு 11:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06146), மறுநாள் காலை 10:30 மணிக்கு தாம்பரம் செல்கிறது.

சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம் (வழியாக ரயில் (06145) மட்டும்), விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி வழியாக (இரு ரயில்களும்) செல்கின்றன.

* தாம்பரம் – செங்கோட்டை





அக்.,19 இரவு 11:55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06089), மறுநாள் மதியம் 12:15 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. மறுமார்க்கத்தில், அக்.,20 மதியம் 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06090), மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் செல்கிறது.

தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக செல்கிறது. இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

Advertisement