புதுரோடு உயர்ந்ததால் தாழ்ந்தது ரேஷன் கடை
சோழவந்தான்: ‘‘வடகாடுபட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு உயர்ந்ததால் பள்ளமான ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்’’ என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இங்குள்ள பெருமாள் கோயில் தெருவில் காடுபட்டி, விக்கிரமங்கலம் ரோட்டருகே ரேஷன் கடை அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் வனத்துறைக்குரிய இடத்தில் 150 மீ., நீளத்திற்கு 'பேவர்பிளாக்' கற்கள் அமைத்து புதிதாக தார்ரோடு அமைக்கப்பட்டது.
இதனால் ரோடு உயர்ந்து, ரேஷன்கடை தாழ்ந்து விட்டது. ரோட்டுக்கும் கடைக்கும் இடைப்பட்ட பகுதி குண்டும் குழியுமாகவும் கரடுமுரடாகவும் மாறிவிட்டது. இதனால் கடைக்கு வருவோர் குறிப்பாக வயதானோர் தடுமாறி விழுகின்றனர். பல நேரங்களில் வாங்கிச் செல்லும் பொருட்கள் சிதறி வீணாகின்றன. அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
பஸ்ஸ்டாண்ட் பணிகள் முடியாமல் ‘டெண்டர்’ விட பொதுமக்கள் எதிர்ப்பு: ரத்து செய்தது உசிலை நகராட்சி
-
தினமும் ஆறு டன் மக்காத கழிவுகள் சேகரிப்பு: தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைப்பு
-
நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம்: கமிஷனர் திடீர் ஆய்வு
-
மாமியாரை கொன்ற வழக்கில் தலைமறைவானவர் கைது
-
பொள்ளாச்சியில் அமைகிறது ‘பிலிம் டூரிசம்’: அதிகாரிகள் கள ஆய்வு
-
தக்காளி விலை திடீர் சரிவு: வரத்தும் குறைந்தது