குடிநீர் பிரச்னைக்கு தீர்வு பொதுமக்கள் முற்றுகை
பல்லடம்: கரைப்புதுார் ஊராட்சி, பாச்சாங்காட்டுப்பாளையத்தில் ஆறு மாதங்களாக மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர் வினியோகம் இல்லாததால், குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணக்கோரி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர்.
அருள்புரம், பாச்சாங்காட்டுப்பாளையம் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அத்திக்கடவு திட்ட குடிநீர் மட்டும் கிடைப்பதாகவும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகாலைத் துார்வார வேண்டும் என்று வலியுறுத்தினர். நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
குடிநீர் பிரச்னை குறித்து ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்ட பாச்சாங்காட்டுப்பாளையம் பகுதி மக்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மழைநீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு
-
‘தினமலர்’ அ.. ஆ.. அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் 20ம் தேதி கோலாகலம்: விஜயதசமி திருநாளில் வித்யாரம்பத்திற்கு தயாராகுங்கள்
-
சுப்ரமணிய பாரதி பள்ளியில் தனித்திறன் கண்காட்சி
-
ஒவ்வொருக்கும் தேசநலன் முக்கியம்: விட்டல் தாஸ் மகராஜ்
-
பள்ளிகளில் கேக்கிற்கு பதில் கடலைமிட்டாய் வழங்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
-
பின்னலாடை தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் பதிவாகுமா?
Advertisement
Advertisement