சுப்ரமணிய பாரதி பள்ளியில் தனித்திறன் கண்காட்சி
புதுச்சேரி: திருக்கனுார், சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் கலை, அறிவியல் மற்றும் தனித்திறன் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசீலா சம்பத் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் வரவேற்றார்.
புதுச்சேரி மாநில தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி விரிவுரையாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் குத்து விளக்கேற்றி, கலை, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை பயிலும் மாணவர்கள் 300க்கும் மேற்பட்ட தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், தொடக்க நிலை, நடுநிலை மற்றும் மேல்நிலை வகுப்பு வாரியாக சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்த படைப்புகளுக்கு வரும் குழந்தைகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
அறிவியல் கண்காட்சியை 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.
நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
5 நாட்களுக்குப் பிறகு ஏறுமுகமாகிய தங்கம் விலை; இன்று ரூ.160 உயர்வு
-
அதிக மழைப்பொழிவு எங்கே!
-
தவெகவில் போதை மாபியா... ஊருக்கு மட்டும் உபதேசமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட மேலும் ஒரு டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு
-
இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சி தோல்வி; பியூஷ் கோயல்
-
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், வரிகள் ரத்து; அதிபர் டிரம்ப் அறிவிப்பு