‘தினமலர்’ அ.. ஆ.. அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் 20ம் தேதி கோலாகலம்: விஜயதசமி திருநாளில் வித்யாரம்பத்திற்கு தயாராகுங்கள்
புதுச்சேரி: தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் நடத்தும் அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ், விவேகானந்தா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் அனா...ஆவன்னா.. அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, விஜயதசமி நாளான, வரும் 20ம் தேதி காலை 7:30 மணி 9:00 மணி வரை, புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாக நடக்க உள்ளது.
இதில் 2.5 வயது முதல் 3.5 வயது வரை உள்ள மழலைகளின் விரல் பிடித்து மக்கள் பிரதிநிதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகள், பிரபல கல்வியாளர்கள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் அ––ஆ.,எழுதி பழக்க உள்ளனர்.
நிகழ்ச்சியில், முன் பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கு ‘ஸ்கூல் கிட்’ இலவசமாக வழங்கப்படும்.
முன் பதிவிற்கு: லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க 78714–79674 மற்றும் 90874–70255 என்ற மொபைல் எண்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தி அகரம் கற்பிக்க உள்ளனர். குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நாள் அவர்களின் வாழ்நாளில் மிக முக்கிய நாள். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அறிவாற்றலும், நற்பண்புகளுக்கும் துணை நிற்கிறது. விஜய தசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள்.
அனுமதி இலவசம்: இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க கல்வி செல்வம் கிடக்க, செல்ல குட்டீஸ்களை அழைத்து வாங்க...அனுமதி இலவசம்
இணைந்து வழங்குவோர்: இந்நிகழ்ச்சியை புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., இணைந்து வழங்குகின்றன.
மேலும்
-
தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்; திடீரென ஒலித்த அலாரத்தால் பரபரப்பு
-
டீசல் நிலுவைத்தொகை வழங்காத தமிழக அரசு பஸ் போக்குவரத்து முடங்கும் ஆபத்து
-
திமுக, அதிமுகவுக்கு ரூ.260 கோடி நன்கொடை: வாரி வழங்கியது லாட்டரி நிறுவனம்
-
பொறாமையில் துடிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்
-
பாறைகளை உடைத்து கடத்த முயன்ற 5 பேர் மீது வழக்கு
-
தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு ரூ.260 கோடி நன்கொடை: வாரி வழங்கியது லாட்டரி நிறுவனம்