ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதான வரி ரத்து; அறிவித்தார் டிரம்ப்
-நமது சிறப்பு நிருபர்-
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்த அதிபர் டிரம்ப் டீசல் வாங்குவதற்கு திடீரென ஒப்பந்தம் செய்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது நாளை (அக்டோபர் 18) அமலுக்கு வர இருந்த, பொருளாதார நடவடிக்கையில் ரஷ்யாவுக்கு டிரம்ப் சலுகைகளை வழங்கினார். கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான தடைகளை டிரம்ப் நீக்கி இருப்பது, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. 100 சதவீதம் இறக்குமதி வரியில் இருந்து நிவாரணம் கிடைத்தது.
அமெரிக்காவின் தேசிய நலனுக்காக என்று கூறி, ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதி தொடர்பான பொருளாதார தடைகள், கட்டுப்பாடுகள், வரிகளை அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். ரஷ்யாவுடன் டிரம்ப் நல்லுறவை வளர்த்து வருவதுடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். உக்ரைனுக்கு ஒரு புதிய தலைவர் தேவை என்று கூறிவரும் வேளையில், ரஷ்யாவுக்கு டிரம்ப் சலுகைகளை வழங்கினார்.
அமெரிக்க பார்லிமென்ட் எம்பிக்கள், ஜனநாயக கட்சியினர், டிரம்ப் சலுகை வழங்கி இருப்பதுக்கு, கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். புடினிடம் டிரம்ப் பணம் பெற்றுள்ளார் என குற்றம்சாட்டினர். கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசமின், ''யாரோ ஒருவர் புடினிடம் இருந்து பணம் பெற்றிருக்க வேண்டும்; யார் எவ்வளவு பணம் பெற்றுள்ளார்'' என விமர்சனம் செய்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க பார்லிமென்ட் எம்பி, ''ரஷ்யா மீதான அனைத்து தடைகளையும் டிரம்ப் நீக்கிவிட்டார். புடினிடம் டிரம்ப் சரண் அடைந்து, உக்ரைன் கூட்டாளிகளுக்கு துரோகம் செய்துள்ளார்'' என்றார்.
ஒவ்வொரு நாட்டிலும் டிரம்ப் போல ஒரு ஆள் இருக்கிறார்கள். நம் நாட்டிலும் இருக்கிறார்கள். என்ன செய்வது காலத்தின் கொடுமை அவ்வளவு தான்.
சந்தோசப்பட இதில் ஒண்ரூம் இல்லை. நாளையே இதை மாற்றுவார். எப்படியோ நவம்பரில் இடை தேர்தல் வருகிறது. சுமார் 210 ஹவுஸ் ரெப் , 35 செனேட்ட மெம்பர்கள் தேர்தெடுக்க படுகிறார்கள். டிரம்மில் ஆட்சி தொட்டு முடிவுக்கு வரும் என்கிறார்கள். பார்ப்போம்
நவீன முகமது பின் துக்ளக்
இப்பொழுதாவது டிரம்புக்கு புத்தி வந்ததே என்று சந்தோஷப்படுங்கள் . இடைக்காலத்தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றால் திரும்பவும் இந்தப் பேய் முருங்கை மரம் ஏறலாம்
இத்தனை மாதங்களாக வசூலித்த வரியை திருப்பி தர வேண்டும்.
அடுத்த நிமிஷம் என்ன செய்வான் என்று கற்பனை கூட செய்யமுடியாத அளவில் ஒரு அதீத சக்தி படைத்த சர்க்கஸ் கோமாளி .
அவர் அமெரிக்க தத்தி?
உக்ரைன் அதிபர் மட்டுமல்ல அவருக்கு ஈடாக உள்ள இன்னோர் பைத்தியம்தான் இந்த ட்ரம்ப். அமெரிக்கர்கள் இனியாவது அடுத்த முறை சரியான அதிபரை தேர்வு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
பல்டி டிரம்ப் புடின் காலுல விழுந்தே விட்டான்யா ஹீஹீஹீ
அண்ணன் சீமான் சொல்வது போல ... பைத்தியக்காரன் கிட்ட சிக்கிக்கிட்டு இந்த உலகம் படுற பாடு அப்பப்பாமேலும்
-
மரணத்தை ஏற்க முடியவில்லை; ஏதாவது செய்ய நினைத்தேன்; இந்திய விமானி ஸ்மிட் மச்சார் பேட்டி
-
கல்வியுடன் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை:கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
-
வடமாநிலத்தவர் துர்கா பூஜை கொண்டாட்டம்
-
நெல் சாகுபடி பரப்பு 515 ஏக்கர் குறைப்பு
-
முதல்வர் விஜய் படம் சிறுசு; ராகுல் படம் பெருசு! அரசு கல்லுாரி விழாவில் காங்., கட்சியினர் ரவுசு
-
சாலை விபத்தில் ஊராட்சி செயலர், மனைவி பலி