த.வெ.க., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை, கலைஞர் நகரை சேர்ந்தவர் ஆதீம், 28. த.வெ.க., பிரமுகர். நேற்றிரவு, 8:30 மணியளவில் ஊத்தங்கரை, த.வெ.க.. - எம்.எல்.ஏ., இளையராஜாவை சந்தித்து விட்டு பல்சர் பைக்கில் வீடு திரும்பினார்.
வழியில் பெரியார் நகரில், காரில் வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். தடுத்த அவருக்கு, கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மர்ம நபர்கள் தப்பினர். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement