தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வரும் வன விலங்குகள்

பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம், அரூர் வருவாய் கோட்டத்தில், அரூர், மொரப்பூர் உள்ளிட்ட, 4 வனச் சரகங்கள் உள்ளன. இதில், மான், முயல், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. தற்போது நிலவும் கடும் வறட்சியால் அரூர் வனசரகத்திற்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி, சாலுார், பட்டுகோணாம்பட்டி, அடிமைப் புதுார், மொரப்பூர் வன சரகத்தில் கவரமலை பகுதியில் பூதநத்தம், தென்கரை கோட்டை, கேத்துரெட்டிப்பட்டி, பில்பருத்தி, கதிரிபுரம், வாசிக்கவுண்டனுார், சேலம் வனகோட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட காளிப்பேட்டை, அண்ணா நகர், தமாணிக்கோம்பை, முள்ளிகாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மான் மற்றும் காட்டெருமைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி, வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருகின்றன.
அவ்வாறு வரும்போது, வாகனங்களில் அடிபட்டும், கிணற்றில் விழுந்தும், நாய்களால் கடித்தும் உயிரிழக்கும் நிலையுள்ளது. எனவே, வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் வெளியே வருவதை தடுக்கும் வகையில், வனப்பகுதி களிலுள்ள நீர்நிலைகள் மற்றும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு தேவையான தீவனங்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம், வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளிவருவதை கட்டுப்படுத்தலாம் என, கிராம மக்கள் கூறுகின்றனர்.

Advertisement