சாலை விபத்தில் ஊராட்சி செயலர், மனைவி பலி

நமது நிருபர்




திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - செந்துறை சாலையில் கோட்டையூர் ஊராட்சி செயலர் செந்தில்வேல் 55, அவரது மனைவி, மகள் நின்று கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியது. ஊராட்சி செயலர் செந்தில்வேல், அவரது மனைவி மதிவதனி உயிரிழந்தனர். மகள் ஹரிணி 16, படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்ப சாலையோரம் நின்ற போது விபத்து நடந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement