முதல்வர் விஜய் படம் சிறுசு; ராகுல் படம் பெருசு! அரசு கல்லுாரி விழாவில் காங்., கட்சியினர் ரவுசு
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பட்டம் வழங்கினார்.
அதை ஒட்டி, காங்., சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன் ஏற்பாட்டில், காட்டுக்கோட்டை முதல் வடசென்னிமலை அரசு கல்லுாரி வரை, காங்., கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
கல்லுாரி வளாக பகுதியில், தமிழக அரசின் முத்திரை உள்ள பேனரில், முதல்வர் விஜய் படம் சிறிதாகவும், காங்., கட்சி எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன், மாவட்ட தலைவர் தேவேந்திரன், கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் படங்கள் பெரிதாகவும் இடம்பெற்றிருந்தன.
காங்., கட்சி கொடி நிறத்தில், அமைச்சர், மாவட்ட தலைவர் பெயர்கள் எழுதப்பட்டிருந்த பேனரில், கல்லுாரி முதல்வர் படம், பெயரும் இடம்பெற்றிருந்தது. விழா மேடை அருகே, மற்றொரு பேனரில் அமைச்சர் விஸ்வநாதன் படம் மட்டும் பெரிதாக இருந்தது. அந்த பேனரில் கடைசி நேரத்தில், முதல்வர் விஜய் படத்தின் ஸ்டிக்கர் மட்டும் சிறிதாக ஒட்டப்பட்டிருந்தது.
உளவுத்துறை எஸ்.பி., மயில்வாகனன் பங்கேற்ற நிலையில், அத்துறை போலீசார் அறிவுறுத்தியும், கல்லுாரி நிர்வாகம், பேனரை அகற்றவோ, மாற்றவோ கண்டுகொள்ளாததால் சர்ச்சை எழுந்தது.
கீழே அமரவைப்பு
ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, தலைவாசல் தாசில்தார் காத்தமுத்து, மேடையில் கீழ் பகுதியில், பத்திரிகையாளர்களுக்கு இருக்கை போட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அரை மணி நேரத்துக்கு பின், ஆர்.டி.ஓ.,வை மட்டும், மேடையில் அமரவைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அமைச்சர் பங்கேற்ற விழாவில், கெங்கவல்லி, ஆத்துார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரனுக்கு அழைப்பு விடுக்கப்படாததும்,
சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும்
-
பெண்ணிடம் ரூ.1.65 லட்சம் மோசடி
-
வைகை அணையில் பராமரிப்பு இல்லாத ரவுண்டானா பூங்கா
-
சென்னையில் 30 செ.மீ., தாண்டியும் மழை பெய்தால் என்ன செய்யமுடியும்; அமைச்சர் விக்னேஷ்
-
சிதிலமடைந்த ஐயனார் கோவில் புனரமைக்க கோரிக்கை
-
க. புதுப்பட்டியில் ஊத்துக்காடு பாலம் சேதம்: பள்ளி வானங்கள் சிரமம்
-
கவியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணியர்