கவுன்டரில் ரயில் டிக்கெட் எடுத்தாலும் இனி இன்சூரன்ஸ் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி: ரயில்வே கவுன்டர்களில் நேரடியாகப் பெறப்படும் டிக்கெட்டுகளுக்கும் அக்டோபர் 27 முதல் இன்சூரன்ஸ் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: ரயில் பயணங்களின் போது எதிர்பாராத விதமாக விபத்துகள் நேரிட்டால், பயணிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க விபத்து காப்பீடு அவசியமாகிறது. இதுவரை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே, பெயரளவிலான கட்டணத்தில், விருப்பத் தேர்வாக விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், நாட்டின் பெரும்பாலான பொது மக்கள், ரயில் நிலைய கவுன்டர்களில் நேரடியாக வரிசையில் நின்று, ஆப்லைன் முறையில் டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இவர்களுக்கு இந்த காப்பீட்டுப் பலன் கிடைப்பதில்லை என்ற குறை நீடித்து வந்தது.
இதைச் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், வரும் அக்டோபர் 27ம் தேதி முதல், கவுன்டர்களில் வாங்கப்படும் ஆப்லைன் டிக்கெட்டுகளுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண, ஏழை பயணிகளும் விபத்துக் காலங்களில் நிதிப் பாதுகாப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
துவங்குகிறது புதிய அத்தியாயம்; உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; பியூஷ் கோயல்
-
2029 ஏப்ரல் முதல் பி.எஸ்.,-7 விதிகள் அமல்: மத்திய அரசு அதிரடி
-
ரஷ்யாவுக்கு உதவுகிறது அமெரிக்கா!: உக்ரைன் குற்றச்சாட்டு
-
தசராவை முன்னிட்டு டில்லியில் உருவான 221 அடி உயர ராவணன் பொம்மை
-
இந்திய சட்டத்தை மதித்து நடந்தால் மட்டுமே ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி: மத்திய அரசு திட்டவட்டம்
-
பாக்., எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி: இந்திய ராணுவம் உஷார்