சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
புதுடில்லி: ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரியாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாளை (அக்.,17) வரை அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சவுதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்களின் சேவை அக்.,20ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றமான சூழலால், அக்., 20 வரை ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களுக்கு இடையேயான அனைத்து ஏர் இந்தியா விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திரும்ப வழங்கப்படும். சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான நோக்கம், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மத வெறியால் உருவாகிறார்களா..ஆறாம் அறிவற்ற மிருகங்களை விட மோசமானவர்கள்.மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை