பெயரை கூட ஏற்க முதல்வர் விஜய்க்கு மனமில்லையா? கேட்கிறார் உதயநிதி
சென்னை: கோவையில் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை; திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.
வழக்கமாக திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் 'நான் முதல்வன்'என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள். இந்த Cheap CM-இன் ஸ்டிக்கர் ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?
'முதல்வன்' என்று சொன்னாலே திமுக தலைவர் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா? இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?
திமுக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது, திட்டங்களை ரத்து செய்வது, ரத்து செய்தவற்றையே ரத்து செய்து யு-டர்ன் அடிப்பது என்று சர்க்கஸ் நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை முதல்வர் நடத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாவம் இப்புடி கதறி அழுவுறாமாதிரி ஆயிடுச்சேமேலும்
-
லட்சியம் அடைய லட்சம்! வீடுகளில் சோலார் மின் உற்பத்திக்கு மானியம்
-
களை செடிகளால் தூர்ந்த குளம் கோவில் நிர்வாகம் பாராமுகம்
-
தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளர்ச்சி ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்கள்
-
வழிந்தோடும் கழிவுநீரால் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
-
போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை: 2 பேர் கைது
-
குடியுரிமை பெற்று தருவதாக ரூ.60 லட்சம் மோசடி ஜெர்மனில் இருந்து டில்லி வந்த மூதாட்டி கைது