சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு, அவர் மீது அடுத்தடுத்து பல பெண்கள் பாலியல் புகார் அளித்து வருகின்றனர். இந்தப் புகார்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட வீரமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிறுமி ஒருவரின் தாய் அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்று 2 நாள் போலீஸ் காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து இருந்தனர்.
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை