தீபாவளிக்கு இலவச மளிகை தொகுப்பு: முதல்வர் திட்டம்
சென்னை: தீபாவளிக்கு இலவச மளிகை தொகுப்பு வழங்குவது குறித்து, நிதித் துறையிடம் சில விபரங்களை, முதல்வர் விஜய் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது த.வெ.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தீபாவளி பண்டிகை நேரத்தில், ரேஷன் கடைகள் வாயிலாக இலவச மளிகை தொகுப்பு வழங்க திட்டமிடப்படுகிறது. இதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என நிதித் துறையிடம், முதல்வர் விஜய் விபரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி மளிகை தொகுப்பு வழங்கினால், மக்கள் ஆறுதல் அடைவர் என முதல்வர் விஜயிடம், அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். எனவே, தீபாவளி மளிகை தொகுப்பு குறித்த அறிவிப்பை, முதல்வர் விஜய் வெளியிட வாய்ப்புள்ளதாக, தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எந்த அரசியல் கட்சியும் விலைவாசி கண்டித்து ஆர்பாட்டம் செய்யவிலை அவர்களுக்கு தெரியும் அரிசி, பருப்பு அலைகள் யாரிடம் உள்ளது அவர்கள் எல்லாம் கோர்ட் கேஸ் என்று அலைகிறார்கள் அதை திசை திருப்பவும் பணம் பற்ற குறை சரி செய்ய இந்த நாடகம் மக்கள் இது போன்றவர்களை மன்னிக்கக்கூடாது.
கடைசி வரை, வேலை வாய்ப்பு உற்பத்தித் திறன் விவசாய முன்னேற்றம் பற்றி சிந்தனையே இல்லை.எவ்வளவு இலவசம் கொடுத்தால் மக்கள் சோம்பேறியாகி டாஸ்மாக் அடிமைகளாக வைத்திருக்கலாம் என்றே சிந்திக்கின்றனர்.சுதந்திரம் வாங்கி 80 வருடங்கள் முடியப் போகிறது இன்னமும் முறையான குடிநீர் மின்சாரம் கிடைக்கவில்லை.சாராயத் துறை மட்டும் தீயா வேலை செய்யுது.
நல்ல முடிவு!
அருகிற வரை ரீல்ஸ் ஓடும். ரீல்ஸ் மட்டுமே ஓட்டிக்கொண்டிருந்தால் விரைவிலேயே அறுந்துடும் .
இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் அதை ஒரு தொழிலில் முதலீடு செய்து அதில் வரும் வருமானம் கொண்டு செலவு செய்தால் முதலீடு அப்படியே இருக்கும். ஆனால் முதலீட்டை மாதாமாதம் எடுத்து செலவு செய்தால் கையிருப்பு தொகை ஆறு மாசத்தில் காலியாகி விடும். பிறகு கடன் வாங்கி தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். அதுபோலத்தான் இதுவும். இலவசத்தினால் ஒரு சில வருஷங்கள் நன்றாக இருக்கும். பிறகு எல்லா பொருட்களும் விலையேற்றத்தை சந்திக்கும். மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் குடும்பம் நடத்த பத்தாது. இதில் பெரிதும் பாதிக்கப்பட போவது ஏழை மக்களும் நடுத்தர குடும்ப மக்களுந்தான்
தீபாவளிக்கு இலவச மளிகை தொகுப்பு: முதல்வர் திட்டம் .அப்படி போடும் ரேஷன் பொருட்களில் தரம் முக்கியம்
வணக்கம். அனைத்து கட்சி அமைச்சர்களிடம் இருக்கும் பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள், பின்னார் தமிழ்நாட்டின் கடன் சுமை குறையும், விலைவாசி கட்டுக்குள் வையுங்கள், இடைத்தரர்கள் முற்றுலும் ஒழியுங்கள். படிப்படியா இலவசம் வேண்டாம். ஆண்கள் நாங்கள் ரொம்ப பாவம். புரிந்து கொள்ளுங்கள்.
ஜி ஸ்கொயர் மூலமாக தமிழகம் முழுவதும் ஆக்ரமிப்பு செய்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
இது உண்மையா. முன்னாள் மருமகன் பல லட்சம் டன் அரிசி பருப்பு பதுக்கி கூடுதல் விலையில் விற்கிறாரமே
அரசியல் சாக்கடைகள் எல்லாமே ஒவ்வொரு விதமாக திருடுவார்கள் . மக்கள் தான் ஏமாளி.
எவனும் வேலைக்கு போக வேண்டாம். தமிழ்நாட்டில் எல்லோரும் லிபியாவின் கடாபி ஆட்சி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நிர்வாக சீர்கேடு, தனி மனித முகஸ்துதி, ஊழல் பிரதானம், இதையெல்லாம் மறைக்க மக்களுக்கு இலவசம். இலவசங்கள் குறுகிய காலம் இனிக்கும் நீண்ட காலம் கசக்கும்.மேலும்
-
5 நாட்களுக்குப் பிறகு ஏறுமுகமாகிய தங்கம் விலை; இன்று ரூ.160 உயர்வு
-
அதிக மழைப்பொழிவு எங்கே!
-
தவெகவில் போதை மாபியா... ஊருக்கு மட்டும் உபதேசமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட மேலும் ஒரு டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு
-
இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சி தோல்வி; பியூஷ் கோயல்
-
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், வரிகள் ரத்து; அதிபர் டிரம்ப் அறிவிப்பு