பாட்டி – பேரனை தாக்கி நகை, பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர் அட்டகாசம்
அவிநாசி: அவிநாசி அருகே தோட்டத்து வீட்டில் புகுந்த மூன்று முகமூடி கொள்ளையர்கள், 7 பவுன் தாலிக்கொடி, செயின் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தத்தனுார் ஊராட்சி, சுள்ளிபாளையம் பொன்னியன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி, 61. மனைவி பூங்கொடி, 58, மகள் தமிழ் இலக்கியா, 33, பேரன் ஜோஹித் பிரணவ், 11 ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மகளை அழைத்து வர சிவசாமி நம்பியூர் சென்றிருந்தார். இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்த பூங்கொடி, ஜோஹித் பிரணவ் ஆகியோரை முகமூடி அணிந்த மூன்று பேர் அரிவாள், பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டினர். பூங்கொடி சத்தமிட்டதால், இருவரையும் தலையில் தாக்கிவிட்டு, நகை, பணம் இருக்கும் இடத்தைக் கேட்டு மிரட்டினர். இதையடுத்து, 7 பவுன் தாலிக்கொடி, செயின் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னிப்பு கேட்ட கொள்ளையன்
கொள்ளையடித்துச் செல்லும்போது, பூங்கொடியின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளையன் ஒருவன், அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுச் சென்றார்.
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை