கல்லுாரி மாணவி மாயம்

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சாமிசெட்டிபட்டி பஞ்., பங்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாலதி, 19. இவர், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாலதி மாயமானார். பெற்றோர் புகார்படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement