மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குழந்தைவேல், 55. இவர் நேற்று முன்தினம் காலை, ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், வீட்டில் இருந்து ஓமலுாருக்கு, பொம்மிடி சாலையில் சென்றார்.
குண்டல்மடுவு கவரமலை வனப்பகுதியில் சென்றபோது, மலை பகுதியில் இருந்து வந்த மான் சாலையை கடக்கும் போது , கவனக்குறைவாக பைக் ஓட்டிச் சென்ற குழந்தைவேல், மான் மீது மோதினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை
-
கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.,: அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி
Advertisement
Advertisement