பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த, 2 கிராம் தங்கத்தோடு திருடியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 75; இவருடைய கணவர் முனியப்பன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி, வெவ்வெறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த, 14ம் தேதி ஜெயலட்சுமி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவருடைய மகன் போனில் அழைத்தும் எடுக்கவில்லை. இதுகுறித்து, அப்பகுதியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சென்று பார்த்தபோது, ஜெயலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, பென்னாகரம் போலீசார் அவரது சடலத்தை மீட்டு, மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த, 2 கிராம் தங்கத்தோடு பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைத்து, கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை
-
கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.,: அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி