நில மோசடியில் இருவர் கைது
மணலி: போலி ஆவணங்கள் தயாரித்து, மற்றொருவர் நிலத்தை விற்பனை செய்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
மணலி, செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு, மணலி – புதிய எம்.ஜி.ஆர்., நகரில், சொந்தமான மனை இருந்துள்ளது. இந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, பாளையம் என்பவர், 2022ல், விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி, கடந்த ஜூலையில், மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி, மோசடியில் தொடர்புடைய, மணலியைச் சேர்ந்த விஜயன், 44, ராபர்ட், 35, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர். இருவரும் வி.சி.க., பிரமுகர்கள் ஆவர். தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement