நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி எதிர்பார்க்கும் கோவை; மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவாரா முதல்வர் விஜய்?
கோவை: கோவைக்கு மிக முக்கியமான தேவை என ஏற்கனவே அறிவித்த நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கு முதல்வர் விஜய் நிதி ஒதுக்குவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
* அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. ஜி.டி.நாயுடு மேம்பாலம் இருக்கிறது. நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ. நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலாண்டு செயல் திட்ட அறிக்கையிலும் சேர்க்கப்பட்டது. நிதி ஒதுக்காததால், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
* மேற்கு புறவழிச்சாலை திட்டம் 3 கட்டமாக பிரிக்கப்பட்டது. முதல்கட்டம் முடிந்து விட்டது. 2வது கட்டத்தில் நிலம் எடுக்கப்பட்டு விட்டது. நிதி ஒதுக்கி, 4 வழிச்சாலை ஏற்படுத்த வேண்டும். ஆணையம் வசம் இத்திட்டம் சென்றதால் முடங்கி இருக்கிறது. நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
* கிழக்கு புறவழிச்சாலையும் அவசியம். புறநகரில் ரிங் ரோடு உருவானால், நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி மறையும். திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதை வலியுறுத்தி, அமல்படுத்த வேண்டும்.
* அவிநாசி ரோட்டில் பாதசாரிகள் கடக்க 5 இடங்களில் கட்ட வேண்டிய சுரங்க நடைபாதை திட்டம் மெட்ரோவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. மெட்ரோ திட்டம் வர காத்திருக்காமல் லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் நடை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
* லாலி ரோடு சந்திப்பில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும், மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு இணைப்பு சாலை ஏற்படுத்தவும் மேம்பாலம் திட்டமிடப்பட்டது. இரு திராவிட ஆட்சிகளிலும் முயற்சி எடுத்தும், ஆய்வை தாண்டவில்லை. லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும்.
* நீலாம்பூர் - மதுக்கரை சாலையை 6 வழியாக விஸ்தரிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செய்ய வேண்டும். அடிக்கடி விபத்து நடந்து உயிர் பலி ஏற்படுவதால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிதி பெற்று, செயல்படுத்த வேண்டும்.
* பழைய உப்பிலிபாளையம் ரவுண்டானாவை அகலப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அறிக்கை தயாரித்தது. இந்த ரோடு, ஆணையம் வசம் சென்று விட்டது. இனி, ஆணையமே இப்பணியை செய்ய வேண்டும். இதையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
* ரேஸ்கோர்ஸில் கட்டிய நீதிபதிகள் குடியிருப்புகள் ஒப்படைக்கப்படாததால் பயனற்று இருக்கின்றன. கூடுதலாக தளங்கள் தேவையா என முடிவெத்து திறந்து வைக்க வேண்டும்.
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, திருத்திய திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். சிறப்பு அதிகாரி நியமித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
* காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டை புதுப்பிக்க, நிதி கேட்டு, அரசுக்கு அனுப்பிய கருத்துரு கிடப்பில் உள்ளது. ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும். வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டம் முடங்கியிருக்கிறது; செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் தெற்குப்பகுதி வளர்ச்சி அடையும்.
* ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும். எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
* கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க, போர்க்கால அடிப்படையில் பில்லுார் அணையை துார்வார வேண்டும். சிறுவாணி அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க, கேரள நீர்ப்பாசனத்துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும். நீர்க்கசிவை தடுக்க நிதி ஒதுக்கி, அப்பணியை விரைந்து செய்ய வேண்டும்.
சரியான எதிர்பார்த்தல் தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கோயமுத்தூர் முக்கிய பங்கு வகிப்பது என்பது எல்லோராலும் அறியப்பட வேண்டிய விஷயம் தான்மேலும்
-
இளைஞர்களை அராஜகத்தில் தள்ளி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி; ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
பெயரை கூட ஏற்க முதல்வர் விஜய்க்கு மனமில்லையா? கேட்கிறார் உதயநிதி
-
போதைப்பொருள் விற்பனையை தடுத்த சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பஞ்சாப் அரசிடம் அறிக்கை கேட்கிறார் அமித் ஷா
-
சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
-
சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
-
அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக கவனம்; இபிஎஸ் குற்றச்சாட்டு