தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை; 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்
சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை துவங்கியது, இதையடுத்து, 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது; ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை கூறியதாவது: தென்மேற்கு பருவமழை நேற்று காலை நிலவரப்படி முழுமையாக விலகியது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, தமிழகத்தில் இயல்பை விட 21 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. கடந்த 2002, 2016, 2012ம் ஆண்டுகளிலும் தென்மேற்கு பருவமழை மிக குறைவாக பெய்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவிலும் மழை பெய்யலாம்.
நிலப்பரப்பு வெப்பநிலை அதிகமாகவே உள்ளது. அதேநேரம், கடல் நீரோட்டம் அடிக்கடி மாறுகிறது. இந்த காரணிகள் அடிப்படையில், நீண்டகால அடிப்படையில் வடகிழக்கு பருவமழை அளவு கணக்கிடப்பட்டு உள்ளது.
இதில், 'எல் நினோ' காரணமாக வெப்பநிலை தற்போதும் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகிறது. இருப்பினும், 'எல் நினோ' காலங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாகவே பதிவாகி உள்ளது. ஆனால், வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவது குறைய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும், ஒரு வாரம் கழித்து தான் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
33 மாவட்டங்களில்..
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, கரூர் மாவட்டம் தோகைமலை, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதிகளில் தலா, 11 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மருதப்பள்ளம் பகுதிகளில் தலா, 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழக தெற்கு கடலோர பகுதிகள் முதல் ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யலாம். இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலுார், பெரம்பலுார், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலுார், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
@block_P@
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில், அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்தார். வானிலை ஆய்வு மையம், காவல் துறை, கடற்படை, பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அடிப்படையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெள்ளம் வரும் போது, அப்பகுதி மக்களை பாதுகாப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு இடர்பாடுகள் இல்லாமல், பொருள் சேதம் இல்லாமல், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், மின்சாரம் தடையில்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 15 மண்டலங்களுக்கும் உயர் அதிகாரிகள், பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 'சூப்பர் எல் நினோ' காரணமாக கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.block_P
ஆண்டவன் போதிய மழை சில இடங்களில் பொழிகிறான். ஆனால் பரவலாக பெய்வதில்லை. ஆண்டவன் கொடுக்கும் மழையை வீணாக்காமல் பகிர்ந்தால் மழை போதியது இல்லை என்ற நிலை பொய்த்துவிடும்
நீங்கள் சொல்லும் கருத்துக்கு மாறாக தான் மழை பெய்ய போகிறதுமேலும்
-
5 நாட்களுக்குப் பிறகு ஏறுமுகமாகிய தங்கம் விலை; இன்று ரூ.160 உயர்வு
-
அதிக மழைப்பொழிவு எங்கே!
-
தவெகவில் போதை மாபியா... ஊருக்கு மட்டும் உபதேசமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட மேலும் ஒரு டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு
-
இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சி தோல்வி; பியூஷ் கோயல்
-
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், வரிகள் ரத்து; அதிபர் டிரம்ப் அறிவிப்பு