போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை: 2 பேர் கைது
குன்றத்துார்: மாங்காடில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது வாலிபரை, கழுத்தில் குத்திக் கொலை செய்த ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நிஷாந்த், 23. இவர், போதை பழக்கத்திற்கு அடிமையானதால், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அடுத்த மாங்காடு, சக்கரா நகரில் உள்ள ‘சென்னை டீ அடிக் ஷன் சென்டர்' என்ற போதை மறுவாழ்வு மையத்தில், ஆறு மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று திருந்திய பாபு, 55, சிவகுமார், 57, ஆகியோர், இந்த மையத்திலேயே தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களுக்கும் நிஷாந்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், நிஷாந்த் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபு மற்றும் சிவகுமார், நிஷாந்தை சரமாரியாக தாக்கி, கழுத்தில் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்காடு போலீசார், நிஷாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபு, சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் சிவக்கொழுந்து உறுதி
-
விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
உள்ளிருப்பு போராட்டம்
-
சாயல்குடியில் 300 கிலோ பாலித்தீன் பறிமுதல்
-
தண்ணீர் இருக்கு.. டம்ளர் எங்கே.. மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
-
ஒரு கட்டடத்தை வேறொரு பயன்பாட்டுக்கு மாற்றலாமா? உள்ளாட்சி அனுமதி குறித்து பொறியாளர் எச்சரிக்கை