பிரம்மா குமாரிகளின் விழிப்புணர்வு யாத்திரை
திருப்பூர்: போதைப் பழக்கத்துக்கு எதிராக, பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் 15 விழிப்புணர்வு வாகனங்களின் யாத்திரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்திலும் காணொலித் திரை, கும்பகர்ணன் உருவம், ஒலிபெருக்கி மற்றும் பதாகைகள் மூலம் போதையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலால் உதவி இயக்குனர் பிரசார வாகனத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டப் பொறுப்பாளர் ரேணுகா தலைமை வகித்தார். பொள்ளாச்சி பொறுப்பாளர் பிரவீணா ஒருங்கிணைத்தார்.
திக்ஷின் பாரத் குஜராத்தி சேவா சமாஜம் அறங்காவலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் யாத்திரை நடக்கிறது.
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் திருப்பூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரை நடந்தது. இதில் பங்கேற்றோர்.