சம்பா சிறப்பு பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 31 கடைசி நாள்
கிருஷ்ணகிரி: சம்பா சிறப்பு பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வரும், 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2026-27ம் ஆண்டு சம்பா சிறப்பு பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், நெல் பயிர் காப்பீடு செய்ய பாகலுார், ஓசூர், மத்திகிரி, நாகரசம்பட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை, பெரியமுத்துார், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, உத்தனப்பள்ளி, சூளகிரி, அஞ்செட்டி, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, ஆலப்பட்டி மற்றும் ஊத்தங்கரை ஆகிய, 17 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.இப்பகுதியில் உள்ள விவசாயிகள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான வரும், 31ம் தேதிக்குள் தங்களது நெல் பயிரை ஒரு ஏக்கருக்கு கட்டணம், 586 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே, விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) மூலமோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள, வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 14447 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
அதிகரிப்பு திருப்புவனத்தில் மணல் கடத்தல் கண்டும் காணாமல் உள்ள அதிகாரிகள்
-
சிங்கம்புணரியில் அதிகபட்சமாக65.40 மி.மீ., மழை பதிவு: மகிழ்ச்சியில் விவசாயிகள்
-
திருப்புவனத்தில் டூவீலர்களில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அதிகரிப்பு
-
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்குபருவ மழை கால வெள்ள சேத தகவல்: 24 மணி நேர ‛கால்சென்டர்’ துவக்கம்
-
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க கூட்டம்
-
மண்டலாபிஷேக விழா