ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருடிய வழக்கில் 3 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சோலார் நிறுவன கோடவுனில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள், மின்சாதனப் பொருட்களைத் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்த புரோஜென் ரினியூவபிள்ஸ் நிறுவனம், கஸ்துாரிரெங்கபுரத்தில் சோலார் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட கோடவுனில் வைக்கப்பட்டிருந்த 90 டிரம் காப்பர் கேபிள்கள், 100 மீட்டர் காப்பர் கேபிள், 90 காப்பர் எர்த் ராடுகள் ஆகியவை கடந்த 1ம் தேதி இரவு திருடப்பட்டன. இதுகுறித்து நிறுவன மேலாளர் ஆனந்த் புகாரில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் சிங் விசாரித்தார்.

இதுதொடர்பாக திசையன்விளை புலியடி தெரு முத்து கிருஷ்ணன், 24, தலைவன்விளை லோகேஷ், 24, திசையன்விளை காமராஜர் நகர் சந்துரு, 21, கைது செய்யப்பட்டனர்.

Advertisement