ஓய்வை விட்டு உங்கள் துறையை கையில் எடுங்கள்; சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் விஜயை கடுமையாக சாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழகம், தள்ளாடும் காவல்துறை. சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
அலட்சியம்
அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப் படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது.
கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க போலீசாரின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. பெருந்துறை அருகே நர்ஸ் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து தவெக நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற தவெக நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். முதல்வரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? மாநில போலீசார் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?
கையில் எடுங்கள்
போதைப்பொருட்களை கட்டுப்படுத்த, முதலில் தன் கட்சியினரை முதல்வர் கண்ட்ரோலில் வைக்க வேண்டும். அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதல்வர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?
காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. போதை பழக்கத்தை விடு, விளையாட்டை எடு என்று சொன்ன முதல்வர் முதலில் ஓய்வை விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரத்யேக வீடியோ!
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அய்யாவுக்கு வீட்ல கம்முனு இருக்க முடியல , கலைஞரின் பழக்கவழக்கங்கள் இவரிடம் இல்லை போல , கலைஞர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், ஏகப்பட்ட பிசியா இருப்பார் , அறிவாலயம் , முரசொலி , கடிதங்கள் , கவி அரங்கங்கள் , சினிமா கதை வசனம் , மேடை பேச்சுக்கள்
, பொதுக்கூட்டங்கள் , இதெல்லாம் இப்போது யாராலும் முடியாது ....
ஆமாம் அப்படியே அறுத்து தள்ளிட்ட பொத்திகிட்டு போவியா
திமுக அயலக அணி தலைவர் சாதிக் பாட்சாவை கைது செய்தது மத்திய அரசு. அப்போ அப்பா வாயை கூட திறக்கவில்லை. கனிமொழி அதற்கு மேல் ஒரு படி மேலே போய், போதை தடுப்பு மத்திய அரசின் கீழ் வருகிறது என்று அடித்து விட்டார். பிடிபட்ட ஆசாமி இன்று நேற்று தொழில் செய்வது போல் தெரியவில்லை. அப்பா ஆசீர்வாததில், ஆட்சியில் தான் வளர்ந்து, செழித்து இருக்க வேண்டும்.
முதல்வர் அவர்களே, ஓய்வை விட்டு, திருட்டு திமுக செய்த ஊழல்களை தோண்டி எடுத்து உள்ளே தள்ளுங்கள். ஒரு எதிர்க்கட்சி தலைவர் அதுவும் நிழல் முதல்வர் சென்னை பெருவெள்ளத்தைக் கவனிக்காமல், துபாய் சென்றுள்ளார்.
60 ஆண்டுகாலமாக திராவிடக்கட்சிகள் மக்களின் எந்தவித எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்யவில்லை என்பதனால்தான் மக்கள்புதிதாக ஒரு ஆட்சியை தேர்தெடுத்திருக்கிறார்கள் என்பதனை மறந்து, காற்றில் பறக்கவிட்டு திமுகவும் அதிமுகவும் அறிக்கைகளை விடுவது வேடிக்கையாக இருக்கிறது.
மக்களின் பணத்தினை திராவிட கட்சிகளை போல் கொள்ளையடிக்காமல், ஊழலற்ற ஆட்சியை கொடுக்க நினைப்பவர்களை பார்த்தால் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.
பதவியிலிருக்கும்போது சொல்லத் தவறியதை, முடியாததை, செய்யத் தவறியதை, முடியாதையெல்லாம் புது அரசு செய்யவேண்டுமென்று சோல்கிறார். வெட்கம்.
அப்ப உங்க கட்சியை கலைக்க போறீங்களா? உன் கட்சியை சேர்ந்த அம்புட்டு பேரையும் கைது செய்திடுவாங்களே
எது.. உண்டி குலுக்கும் வேலையா? முத்தமிழ் வித்தவர் இருக்கும்போது
எதோ ஒரு காரணம் சொல்லி தனக்கு தானே விழா எடுத்து உண்டி கலெக்ஷனை வாங்கி கொண்டார்.. இப்பத்தான் கோடி கோடியாக சொத்து இருக்கே.. அப்பறம் ஏன் உபிகளுக்கு உண்டி குலுக்கற வேலை..
பாசு .... இவங்க செய்யற அசிங்கத்தையெல்லாம் நாமளும் பண்ணியிருக்கோம் .... பாருங்க, எல்லோரும் உங்களை பார்த்து சிரிக்கிறாங்க ....
ஓய்வை விட்டு உங்கள் துறையை கையில் எடுங்கள். இல்லாவிட்டால் துபாய்க்கு ஓய்வில் சென்றுள்ள உதயநிதி திரும்பியவுடன் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒரு பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தி.மு.க நடத்திட நேரிடும் என எச்சரிக்கிறேன்.மேலும்
-
இந்திய கிரிக்கெட் அணி புதிய தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்
-
பயங்கரவாதிகளால் 3 பேர் சுட்டுக்கொலை; சடலங்களுடன் மணிப்பூர் முதல்வர் வீடு முன் மக்கள் போராட்டம்
-
வேன் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்
-
எஸ்.பி., முதல் போலீஸ் வரை ‘புட் பேட்ரோல்’: குற்ற சம்பங்கள் குறைந்துள்ளதால் மக்கள் வரவேற்பு
-
கோயில்களில் ஆயுதபூஜை சிறப்பு வழிபாடு
-
கேமராக்கள் அமைக்க சர்வே