காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின்கீழ் தொழில்நுட்ப உதவியாளர்–1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசாணையின்படி, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு மாதம் 22 ஆயிரம் ரூபாய் ஊதியம் மற்றும் 19 மாதங்களுக்கான பணிக்காலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொது கொள்கை, தொடர்புடைய, இணையாண துறைகள் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் புதுப்பிக்கப்பட்ட தற்குறிப்பு, கல்வி தகுதி, பணி அனுபவங்களுடன் cmdga.kki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாகவும் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.