மாணவியர் விடுதிகளில் வசதிகள் குறித்து ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கல்லுாரி மாணவியர் விடுதிகளில் கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு செய்தார்.

காங்கயம் சாலை, புதுார், ராயபுரம் விடுதிகளில் உணவின் தரம், குடிநீர், மின் வசதி, துாய்மை,நுாலகம், கேமரா, முதலுதவி பெட்டி ஆகியவற்றை பார்வையிட்டார்.

வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்கவும், புகார் பெட்டி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

ஆதிதிராவிடர் நல அலுவலர் சதீஷ், வடக்கு தாசில்தார் புஷ்பராஜ் உடனிருந்தனர்.

Advertisement