பள்ளியில் தடகள போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்
உடுமலை: உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், நேஷனல் மாடல் பள்ளிகளுக்கிடையேயான தடகளப்போட்டிகள் நடைபெற்றன.
டாக்டர் பி.என்.பி., நினைவு சுழற்கோப்பைக்காக இப்போட்டிகள் நடந்தது. நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல், ஒட்டப்பந்தயம், குண்டு எறிதல், மும்முறை பாய்ச்சல் போன்ற போட்டிகளில், மாணவ, மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினராக, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் முன்னாள் மாணவர் அரவிந்த் பங்கேற்றார்.
இப்போட்டியில், கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தையும், கருமத்தம்பட்டி நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி இரண்டாமிடத்தையும், உடுமலை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும், நேஷனல் மாடல் பள்ளிக்குழுமத்தின் தாளாளர் மோகன்சந்தர், செயலாளர் உமாமோகன், பள்ளி முதல்வர்கள், இயக்குநர்களும் ஆசிரியர்களும் பதக்கங்களையும் கோப்பைகளையும் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.