நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள்: கலெக்டர் ஆய்வு
ராஜபாளையம்: ராஜபாளையம் முதல் கிருஷ்ணன்கோவில் வரையிலான பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பாதுகாப்பு பணிகளை கலெக்டர் ஷரண்யா அறி ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவரது செய்தி குறிப்பில்:
திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 744-ல் புதிய சாலை அமைக்கும் பணிகளும் அழகாபுரி முதல் ராஜபாளையம் வரையிலான சாலை பணிகள் நிறைவடைய உள்ளன.
வழிவிடு முருகன் கோவில், மூவரை வென்றான் பகுதியில் கைவிடப்பட்ட பழைய சாலை, கிருஷ்ணன் கோவில் முதல் ராஜபாளையம் வரையிலான 26.685 கி.மீ., பழைய சாலை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க உள்ளன.
எனவே பழைய சாலையின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ததில் சாலை பாதுகாப்பு வசதிகள் மக்கள் தடையின்றி பாதுகாப்பு பயணிப்பதற்காக வசதிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் குறித்த காலத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலை வர பகுதிகளில் குப்பைகளை கழிவு நீரை கொட்டுவோரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.