உலக விபத்து சிகிச்சை தினம்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் உலக விபத்து சிகிச்சை தினத்தை முன்னிட்டு பேரழிவு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் பட்டாசு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத்துறை ஒத்திகை செய்தனர்.
மேலும் போலீசார், ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்படும் நிகழ்வு நடந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவது குறித்தும் நடத்தப்பட்டது.
இதில் டீன் அமுதா ராணி,மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் காளிராஜ், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, அவசர சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் மகேஸ்வரன், உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திகேயன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மது பாட்டில் விற்றவர் கைது
-
கனமழையால் கூடப்பட்டு தடுப்பணை நிரம்பியது: 19 ஏரிகளுக்கு நீர் செல்ல வாய்ப்பு
-
‘ராகுல் நடத்துவது அரசியல் போராட்டம் இல்லை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல்’
-
பள்ளி மாணவர்களுக்கு விற்க இருந்த 600 போதை மாத்திரைகள் பறிமுதல்
-
குழந்தை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை; கணவர், பெற்றோர் மீது வழக்கு
-
துபாய் பறந்தார் உதயநிதி பழைய வீடியோவை வெளியிட்டது தி.மு.க.,