வைகை, கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆய்வு

மதுரை: உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி மதுரையில் வைகை ஆறு, கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் குறித்து ஓய்வு நீதிபதி செல்வம் தலைமையில் ஆய்வு நடந்தது.

நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகர், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், ஆர்.டி.ஓ., கருணாகரன், மாநகராட்சி, நீர்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

விரகனுார் பகுதியில் வைகை ஆறு, சின்ன அனுப்பானடி, முத்துப்பட்டி, பெருங்குடி, பானாங்குளம் கண்மாய்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பானாங்குளம் கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு விட்டது. சின்ன அனுப்பானடி கண்மாயில் அகற்றும் பணி நடக்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட கோயில் பீடங்கள், விளம்பர பதாகைகளை அகற்ற ஓய்வு நீதிபதி செல்வம் அறிவுறுத்தினார்.

Advertisement