சிவகங்கை மாவட்டத்தில் அக்.,20 முதல் 31 வரை தடை: கலெக்டர் ஆகாஷ் உத்தரவு
சிவகங்கை: திருப்புத்துாரில் அக்.,24,அக்., 27 காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை, அக்., 31 ல் பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்பு கருதி அக்., 20 முதல் 31 வரை சிவகங்கை கலெக்டர் ஆகாஷ் 163 (2) தடை உத்தரவு பிறப்பித்தார். திருப்புத்துாரில் அக்., 24 ல் அரசு சார்பில் மருதுபாண்டியர் குருபூஜை, அக்., 27 ல் காளையார் கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்., 31 ல் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாகனங்களில் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளது.
அக்., 20 முதல் 31 வரை சிவகங்கை மாவட்ட அளவில் ஊரடங்கு (163 (2) பி.என்.எஸ்.எஸ்., சட்டம்) உத்தரவை கலெக்டர் ஆகாஷ் பிறப்பித்துள்ளார். இக்கால கட்டத்தில் பொதுக்கூட்டம், ஊர்வலங்கள் கலெக்டரின் முன் அனுமதியின்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொதுக்கூட்டம், ஊர்வலங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருதுபாண்டியர், தேவர் குருபூஜைகளுக்கு வேன், சரக்கு வேன், டிராக்டர், 3 வீலர், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் தொண்டர்களை அழைத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. போலீஸ் அனுமதி பெற்று செல்லும் வாகனங்கள் அவர்கள் நிர்ணயித்த விதிப்படி தான் செல்ல வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு ஜோதி எடுத்து நீண்ட துாரம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு 1 கி.மீ., சுற்றளவிற்குள் போலீஸ் அனுமதியுடன் ஜோதி எடுத்து செல்லலாம் என தெரிவித்துள்ளார். //
மேலும்
-
தனியார் மயம் சர்ச்சை எதிரொலி நகராட்சி நிர்வாக பணிகள் நிறுத்தம்
-
42,000 குடியிருப்புகளை சீரமைக்க ரூ.100 கோடி நகர்ப்புற வாரியம் ஒதுக்கீடு
-
ஜவளகிரிக்கு இடம் பெயர்ந்த ஒற்றை யானை சாலையில் உலா வந்ததால் மக்கள் அச்சம்
-
‘மாஜி’ அமைச்சர் மகனுக்கு எதிரான ‘நோட்டீஸ்’ நிறுத்தம்
-
காளிங்கராயன் விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
-
தோழி சாந்தியின் சதி வலையில் வீழ்ந்தேன் குற்றத்தை மறைக்க பல கோடிகளை இழந்தேன்: ‘கிரானைட்’ வீரமணி வாக்குமூலம்