250 கொசுப்புழு உற்பத்தி இடங்கள் அழிப்பு

மதுரை: மதுரை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, காய்ச்சல் தடுப்பு பணி எதிரொலியாக 250 கொசுப்புழுக்கள் உற்பத்தி இடங்கள் அழிக்கப்பட்டன.

கமிஷனர் கவுரவ்குமார் கூறியதாவது: 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 61 நகர்புற நலவாழ்வு மையங்கள், 3 ஆயுஷ் மருத்துவ நிலைய வளாகங்கள், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு 250க்கும் மேற்பட்ட கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.

இப்பணியில் 500க்கும் மேற்பட்ட கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணியாளர்கள் (டி.பி.சி.,), சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் இரு முறை ஒரு புகை பரப்பும் வாகனம் 8 கி.மீ., வரை சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகிறது என்றார்.

Advertisement