அமோக விளைச்சல் தரும் பண்ணாரி இயற்கை உரங்கள்
விவசாயத்தில் நிலையான மற்றும் தரமான மகசூலைப் பெறுவதற்கு மண் வளத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
பயிருக்கு உரமிடுவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்கள் திறம்படக் கிடைக்க மண்ணின் உயிரியல் வளமும், நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடும் சீராக இருக்க வேண்டும். தொடர் சாகுபடியால் ஏற்படும் கரிம பொருள் குறைதல், மண் இறுக்கம் மற்றும் நுண்ணுயிர் செயல்பாடு குறைதல் ஆகியவை மண் வளத்திற்கும், மகசூலுக்கும் சவாலாகின்றன.
இத்தகைய சூழலில், மண்ணின் இயற்கை வளத்தைப் பாதுகாத்து, வேர் பகுதியில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, பயிர்களின் சீரான வளர்ச்சிக்கும், நிலையான மகசூலுக்கும் உதவும் இயற்கை சார்ந்த வேளாண் இடுபொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதனை முன்னிறுத்தி, பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை, பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையம், விவசாயிகளின் தேவைக்கேற்ப இயற்கை மற்றும் நுண்ணுயிரி அடிப்படையிலான வேளாண் இடுபொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.
காற்றில் உள்ள தழைச்சத்தைப் பயிர்களுக்கு கிடைக்கச் செய்யும் அசோஸ்பைரில்லம். அசட்டோபேக்டர், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள், மண்ணில் உள்ள மணிச்சத்தை கரைக்கும் பால்போ பேக்டீரியம் மற்றும் அவமொரி, மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ள உதவும் வேர் உட்பூசணம் சாம்பல் சத்தைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவும்.
புரட்டுரியா மற்றும் பல்வேறு நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் கலவைகள் அடங்கிய உயிர் உரங்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
அதேபோன்று, பயிர்களை தாக்கும் பல்வேறு நோய்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த உதவும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களை அடிப்படையாகக் கொண்ட சூடாமோனாஸ், பேசிலஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா விரிடி போன்ற உயிரியல் பாக்டீரியா, பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் மெட்டாரைசியம், பிவேரியா, வெர்ட்டிசிலியம், பேசிலஸ் துரிஞ்சியன்சில் போன்ற உயிரியல் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் நுண்ணுயிர் சூழலை பாதுகாக்க முடியும்.
பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையம், மண்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிக மகசூல், நச்சில்லா உணவு உற்பத்தி என்ற நோக்கத்துடன் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப இயற்கை சார்ந்த வேளாண் இடுபொருட்களை உருவாக்கி வழங்குகிறது.
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை