பொங்கல் வேட்டி சேலை நெசவு கூலி உயர்வு
சென்னை: பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான நெசவு கூலியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக கைத்தறித்துறை செயலர் லில்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கான செலவுகளை மேற்கொள்ள, முதல் தவணையாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்வதற்கு, ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கு, உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரகங்களில் வேட்டி, சேலைகள் அறிமுகப்படுத்தப்படுவதால், நெசவு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கைகள் வந்தன. இது தொடர்பாக களஆய்வு செய்து, கூலி நிர்ணய குழு பரிந்துரை அளித்தது.
அதன்படி, பெடல் தறி நெசவு கூலியாக, ஒரு சேலைக்கு 125.27 ரூபாயும், வேட்டிக்கு 49.99 ரூபாயும் வழங்கப்படும். விசைத்தறி நெசவு கூலியாக, ஒரு சேலைக்கு 54.81 ரூபாயும், வேட்டிக்கு, 23.34 ரூபாயும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டிஸ்மிஸ்; நியமித்த ஐந்து நாளில் பதவியை பறித்தார் டிரம்ப்
-
கிரானைட் வீரமணி வழக்கில் 3 வங்கி கணக்குகள் முடக்கம்; ரூ.24 கோடி பறிமுதல்
-
சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
கரூரில் வரும் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
-
புகழிமலை கோவிலில் புரட்டாசி மாத சஷ்டி
-
கரூர் வட்டாரத்தில் தொடர் மழை