வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டிஸ்மிஸ்; நியமித்த ஐந்து நாளில் பதவியை பறித்தார் டிரம்ப்

​வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் புதிய செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்ற கேட்டி ஜக்கரியா, பணியில் சேர்ந்த ஐந்தே நாட்களில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

​வெள்ளை மாளிகையின் முந்தைய செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டுக்குப் பதிலாக, கேட்டி ஜக்கரியாவை புதிய செய்தித் தொடர்பாளராக டிரம்ப் கடந்த அக்டோபர் 9ம் தேதி நியமித்தார்.

​தடுமாற்றம்:



பதவியேற்ற பின்னர் தனது முதல் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை நடத்திய ஜக்கரியா, செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்வதில் கடுமையான தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்த அவர், சுமார் 14 நிமிடங்களிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறினார். ​மேலும், உரிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழ, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

டிரம்ப் பேட்டி



இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஊடகங்களில் ஜக்கரியா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். நிம்மதியாக இருப்பதே சிறந்தது. இந்த விமர்சனங்கள் அவருக்கு தேவையா என அவரிடம் நான் பேசினேன். அவர் மன அமைதியுடன் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ​இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நியமிக்கப்பட்ட ஐந்து நாட்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் கேட்டி ஜக்கரியா

Advertisement