வெளியூர் செல்லும் பயணியரின் வசதிக்காக 5 இடங்களில் காவல் உதவி மையங்கள் திறப்பு

சென்னை: சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணியரின் வசதிக்காக சென்னை காவல் துறை சார்பில், ஐந்து இடங்களில் போக்குவரத்து உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சென்னை, கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து, 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் பயணியரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வெளியூர்களுக்கு பேருந்தில் பயணம் செய்யும் பயணியர் நெரிசல் இன்றி செல்வதற்காக கனரக வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர்.

பொதுமக்களின் உதவிக்காக, கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகம் முன், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் என, ஐந்து இடங்களில் போக்குவரத்து காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெரிசலில் இன்றி வாகனங்கள் செல்ல ஏதுவாக, 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவசர உதவிக்காக, மாதவரம் பேருந்து நிலையம், போரூர் சுங்கச்சாவடி, கோயம்பேடு தேர்தல் ஆணையம் முன் தயார் நிலையில், 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement