முன் விரோதத்தால் வாலிபர் கொலை: மூவருக்கு ‘காப்பு’

ஓசூர்: ஓசூர் அருகே, முன்விரோதத்தில் லட்சுமிபதி, 22, என்பவரை கத்தியால் குத்தி கொன்ற பப்லு, 26, உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், யாகனப்பள்ளியை சேர்ந்த டிப்ளமா பட்டதாரி லட்சுமிபதி. இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சதீஷ், 18, தனியார் கல்லுாரி மாணவர். இவருக்கும், சின்னபேட்டகானப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 19, என்பவருக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டது.

அக்., 12ல், இரு தரப்பினரும் பேச்சு நடத்தினர். சதீஷுக்கு ஆதரவாக லட்சுமிபதியும், ஸ்ரீகாந்துக்கு ஆதரவாக, அலசநத்தம் பப்லு என்பவரும் பேசினர். இதில், லட்சுமிபதி மீது பப்லுவிற்கு விரோதம் உருவானது.

நேற்று முன்தினம் இரவு, லட்சுமிபதி, அவரது நண்பர்கள் மகேஷ், 20, இம்ரான், 30, ஆகியோர், ராயக்கோட்டை சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். சின்னபேட்டகானப்பள்ளியில் லட்சுமிபதியை பார்த்த பப்லு, ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்தார்.

தன் நண்பர்களுடன் சேர்ந்து, லட்சுமிபதியை கத்தியால் குத்தினார். இதில், லட்சுமிபதி இறந்தார். லட்சுமிபதி உறவினர்கள், உத்தனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நேற்று மறியலில் ஈடுபட்டனர். பப்லு, சின்னபேட்டகானப்பள்ளி ஹரிஷ், 25, ஸ்ரீகாந்த், 19, ஆகிய மூவரை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

Advertisement