ஸ்ரீரங்கம் கோயில் நிலம் பதிவு செய்ய தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
நமது நிருபர்
திருச்சி சம்பத்குமார் ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கொடியாலம் வாசுதேவ ஐயங்கார் மற்றும் கொடியாலம் சேஷாத்ரி ஐயங்கார் இடையே 1887 ல் கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள்படி மத சேவைகள், அறப்பணிகளை நிறைவேற்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
ஆவணங்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் பிற கோயில்களில் மத சடங்குகளை நிறைவேற்ற வழிவகை செய்கிறது.
இதற்கு தேவையான வருவாயை ஈட்டித் தரும் நோக்கில் திம்மராயசமுத்திரம், அல்லுார், வீரேஸ்வரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தானமாக வழங்கப்பட்ட 108 ஏக்கர் நிலம் உள்ளது. இதை தனியார் சொத்துக்களாக கருத முடியாது.
இவற்றின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம். இச்சொத்து தொடர்பாக எந்தவொரு விற்பனை பத்திரத்தையும் ஸ்ரீரங்கம், திருச்சி இணை-3, முசிறி, கரூர் குளித்தலை சார்பதிவாளர்கள் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நிலங்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வித பரிவர்த்தனையும் நடைபெறாமல் பாதுகாக்கும் நோக்கில் பத்திரப் பதிவு செய்ய நவ.5 வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றனர்.
அதை ஏன் முழுமையாக தடை விதிப்பதில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை
ஏன் நவம்பர் 5? நிரந்தரமாக தடை செய்யலாமே.?
இடைக்காலத்தடையா ? G square நிறுவனத்தில் பணம் கொடுத்தவா கதி என்ன ?மேலும்
-
இந்திய கிரிக்கெட் அணி புதிய தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்
-
பயங்கரவாதிகளால் 3 பேர் சுட்டுக்கொலை; சடலங்களுடன் மணிப்பூர் முதல்வர் வீடு முன் மக்கள் போராட்டம்
-
வேன் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்
-
எஸ்.பி., முதல் போலீஸ் வரை ‘புட் பேட்ரோல்’: குற்ற சம்பங்கள் குறைந்துள்ளதால் மக்கள் வரவேற்பு
-
கோயில்களில் ஆயுதபூஜை சிறப்பு வழிபாடு
-
கேமராக்கள் அமைக்க சர்வே