கோழி முட்டையால் தகராறு தடுக்க சென்றவருக்கு வெட்டு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு பகுதியை சேர்ந்தவர் முரளிதாஸ், 23. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மணிமாறன். 45. இவர், வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கோழி முட்டைகளை காணவில்லை. இந்த முட்டைகளை, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, 65, என்பவர் வளர்த்து வரும் பூனை எடுத்து சென்றதாக கூறி, அவரிடம் மணிமாறன் தகராறு செய்தார்.
அப்போது, தகராறு முற்றியதில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதை தடுக்க முயன்ற முரளிதாசை, கிருஷ்ணசாமி அரிவாளாள் வெட்டினார். பலத்த காயமடைந்த முரளிதாஸ், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்ரீரங்கம் கோயில் நிலம் பதிவு செய்ய தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இளைஞர் கொலை
-
முன் விரோதத்தால் வாலிபர் கொலை: மூவருக்கு ‘காப்பு’
-
‘மாயமான சிறுமி பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் சன்மானம்’: விழுப்புரம் மாவட்ட த.வெ.க., அறிவிப்பு
-
சப் – -கலெக்டர், தாசில்தாருடன் த.வெ.க., – எம்.எல்.ஏ., வாக்குவாதம்
-
தொகுதி மறுவரை மசோதாவை நிறைவேற்ற பார்லி சிறப்பு கூட்டம்? இம்மாத இறுதியில் நடத்த மத்திய அரசு திட்டம்
Advertisement
Advertisement