கோயில்களில் ஆயுதபூஜை சிறப்பு வழிபாடு
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமிகளை தரிசித்து சென்றனர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் சரஸ்வதி, மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பங்கேறு சுவாமி தரிசனம் செய்தனர். பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள்பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வணிக நிறுவனங்கள், வீடுகளில் பொரி, கடலை, சுண்டல் வைத்தும், புத்தகம், நோட்டுகளை வைத்தும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.-
மேலும்
-
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் ஓ.ஐ.சி., தீர்மானம்; நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்
-
தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
-
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு 49 நாட்களில் 49 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு
-
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
-
தர்மபுரி கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்பனை தொடக்கம்
-
நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி