சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்குபருவ மழை கால வெள்ள சேத தகவல்: 24 மணி நேர ‛கால்சென்டர்’ துவக்கம்
படம் உண்டு சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் நடக்கும் பிரச்னை குறித்து இலவச போன் மூலம் புகார் அளிக்கும் விதமாக ‛கால் சென்டர்’ திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அளவில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் வெள்ள சேதம், மீட்பு பணிகள், போலீஸ் ஸ்டேஷனில் முறையாக புகார் மனு விசாரிக்காதது, வெளியூரில் வசிப்பவர்கள் மூலம், இந்த கால் சென்டர் மூலம் கலெக்டருக்கு புகார் அளிக்கலாம். மின்வாரியம் சார்ந்த மின்தடை, மின்கம்பம் சேதம், டிரான்ஸ்பார்மர் பழுது உட்பட அனைத்து விதமான அவசர கால பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த கால் சென்டர் செயல்படுகிறது. மாவட்ட அளவில் உள்ள பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகள் சார்ந்த இலவச அலைபேசி எண் 1800 425 9090க்கு அழைத்து புகாரினை பதிவு செய்தால், உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் கலெக்டர் ஆகாஷின் நேரடி கண்காணிப்பில் இந்த கால்சென்டர் செயல்படுகிறது. இதற்கு வரும் புகார்களை நேரடியாக கலெக்டரே கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் விதமாகவும், அந்தந்த துறைகளுக்கு புகார் தொடர்பான விபரங்களை அனுப்பும் விதமாக அமைத்துள்ளனர். ///