சிங்கம்புணரியில் அதிகபட்சமாக65.40 மி.மீ., மழை பதிவு: மகிழ்ச்சியில் விவசாயிகள்
சிவகங்கை: வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் சிங்கம்புணரியில் அதிகபட்சமாக 65.40 மி.மீ., மழை பதிவால், நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்., 15 ல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்தது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அக்.,14 முதலே பரவலாக அனைத்து பகுதியிலும் மழை பெய்ய துவங்கியது. அதை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் துவங்கியதை அடுத்து நேற்று முன்தினம் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 65.40 மி.மீ.,ம் அதனை தொடர்ந்து இளையான்குடியில் 41 மி.மீ., திருப்புத்துாரில் 30 மி.மீ., திருப்புவனத்தில் 8.80 மி.மீ., சிவகங்கையில் 6.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் குடிசை வீடு ஒன்று பகுதி சேதமானது. மாவட்ட அளவில் வேறு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு எல்- நினோ தாக்கம் காரணமாக அதிகளவில் மழை இருக்கலாம் என்ற நோக்கில், வெள்ள சேதம் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வருவாய், தீயணைப்பு, போலீஸ், பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு துறையினர் மீட்பு கருவிகளை வைத்து, மாவட்ட அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆங்காங்கே செயல்முறை விளக்க பயிற்சி அளித்து வருகின்றனர். தொடர் மழையால் விவசாயிகள் நெல் நடவு பணிகளை மேற்கொள்ள வயல்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில் போன்ற பகுதிகளில் மழை இல்லை. ///
மேலும்
-
நல்ல மகராசன் எனக்கு நல்லது பண்ணி விட்டார்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
-
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
-
அதிகரிப்பு திருப்புவனத்தில் மணல் கடத்தல் கண்டும் காணாமல் உள்ள அதிகாரிகள்
-
திருப்புவனத்தில் டூவீலர்களில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அதிகரிப்பு
-
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்குபருவ மழை கால வெள்ள சேத தகவல்: 24 மணி நேர ‛கால்சென்டர்’ துவக்கம்
-
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க கூட்டம்