மண்டலாபிஷேக விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன், ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் கடந்த ஆக., 30 அன்று திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு மண்டல பூஜை விழா நடந்தது. மூலவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு யாகவேள்வி வளர்க்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement